இலங்கைக்கு கடன் வழங்கும் சந்திப்புக்களுக்கு சர்வதேச நாணய நிதியம் தயார்!
இலங்கைக்கான கடன் வழங்கல் நிகழ்ச்சி திட்டம் தொடர்பில் வரும் நாட்களில் தமது அதிகாரிகள், இலங்கையின் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்துவர் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
நிதியத்தின் பேச்சாளரான கெரி ரைஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிக் கோருவதை நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், சுமார் இரண்டு வருடங்களின் பின்னர், பல்வேறு தரப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக அந்த நிதியத்திடம் செல்ல தீர்மானித்தது.
இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் நாட்டு மக்களுக்கான உரையின்போது அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த மாதத்தில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவுக்கு வரும்போது பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
