இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சை மற்றும் இஞ்சி விலை
இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக சந்தையில் க ரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலையும் 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
ஊவா மாகாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு எலுமிச்சை பழம் விநியோகிக்கப்படுவதாகவும், ஆனால் முன்பைப் போன்று போதியளவு எலுமிச்சை பழம் கிடைப்பதில்லை எனவும் அந்த நிலையம் தெரிவிக்கின்றது.
பழம் ஒன்று நூறு ரூபா
இதனால், எலுமிச்சை பழத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக நேற்றைய தினம் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |