இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை பெண்களில் ஐந்தில் ஒரு பங்கினர், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேசியக் கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி 20.4% பெண்கள் தங்கள் நெருங்கிய துணையால் வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் (20.4%) நெருங்கிய துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளார்
எனினும் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் பாதி (49.3%) பேர் முறையான சட்ட உதவியை எங்கும் நாடவில்லை.
அதேநேரம் நெருக்கமான துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.7%) தமது உயிரைப் போக்கிக்கொள்ள நினைத்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் வன்முறை ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
