மாதகலில் களைகட்டும் முரல் மீன் திருவிழா! சுற்றுலா ரீதியாக பிரபலமாகும் மாதகல் கடற்கரை (photos)
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் விசேட அம்சமாக காணப்படுகின்ற முரல் மீன்பிடி அதிகரித்த காலமாக இம்மாதம் காணப்படுகின்ற நிலையில் முரல் மீன் விற்பனை அதிகரித்த நிலையில் மாதகல் மேற்கு கடற்கரை இரவு நேரங்களில் விழாக்கோலம் கொண்டு காணப்படுகின்றது.
மாதகல் கடற்பரப்பில் பிரிக்கப்படுகின்ற முரல் மீன் தனித்துவமானதும் சுவை வாய்ந்ததுமாக காணப்படுகின்ற நிலையில் அதிகளவானோர் குறித்த கடற்பரப்பிற்கு தமது குடும்பங்களுடனும் நண்பர்களுடனும் வருகை தருகின்றனர்.
படகுகளில் பிடித்து வரப்படும் மீனை கரையில் உடனடியாகவே கொள்வனவு செய்கின்ற நிலையும் பின் மீனவர்கள் மீள உடனடியாக முரல் மீன் பிடிக்க கடலிற்கு செல்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஒரு மீன் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில் வடமாகாண சுற்றுலா பணியகம் இக்காலப்பகுதியினை
மாதகல் பகுதியினை சுற்றுலாவிற்கு உகந்த காலமாக அடையாளபடுத்தியுள்ளார்கள்.
இதே நிலையில் குறித்த பகுதியில் கரம் சுண்டல் உட்பட்ட பல உணவு வகைகளும்
பிரதேச வாசிகளால் விற்பனை செய்யபடுகின்றன.
![Gallery](https://cdn.ibcstack.com/article/60528809-a2b9-49e5-b2fb-f1eabe10a842/23-640d56df1240a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/25dbc79a-327b-4b50-b9da-ae3c77b0fb65/23-640d56df566e9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c7dfd6a4-15f4-442f-a3ac-6ba62dcda33f/23-640d56df9f324.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/26b02d3b-7829-4df6-8192-b55b9bb9bb7f/23-640d56dfe13b4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/081895a6-8214-40c6-b348-09e9f2997073/23-640d56e04dde5.webp)