மாவீரர்தினத்துக்கு தடை உத்தரவுகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் தள்ளுபடி (PHOTO)
மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று(23.11) தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுதொடர்பில், அறுவருக்கு மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி இரண்டு பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான், குறித்த நிகழ்வு நடைபெறும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
குறித்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி ராகினி நடராசா சட்டத்தரணி வெலீனா, சட்டத்தரணி நிரோசன் மற்றும் சட்டத்தரணி சுதர்சினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri