தமிழர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விமான நிலையத்தில் கைது
போலி போலந்து வீசாக்களுடன் நான்கு பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் போலி போலந்து வீசாக்களுடன் டோஹா, கட்டார் ஊடாக போலந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் இராஜகிரிய பிரதேசங்களை வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 21 மற்றும் 37 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக போலந்துக்கு தொழில்வாய்ப்புக்காக அனுப்புவதாக உறுதியளித்து அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட மனித கடத்தல்காரர்களே இந்த குழுவை அனுப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri