கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து டக்ளஸ் தலைமையில் ஆராய்வு! (Photos)

Srilanka India Fishermen Today DouglasDevananda
By Ashik Feb 12, 2022 08:36 AM GMT
Report

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (12) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறிப்பாக மன்னார் பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் சில பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினரின் சோதனை நடவடிக்கைகளினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து டக்ளஸ் தலைமையில் ஆராய்வு! (Photos) | Srilanka India Fishermen Douglasdevananda Today

கடற்கரையில் கடற்றொழிலாளர்களை சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொள்ள கடற்படையினர் நீண்ட நேரத்தை செலவிடுவதால் தாமதித்தே தாங்கள் தொழிலுக்குச் செல்வதாலும், இதனால் தமது தொழில் நடவடிக்கை தாமதிப்பதாகவும், எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தாமதம் இன்றி தொழிலுக்குச் செல்ல கடற்படையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பாஸ் மற்றும் ஏனைய பதிவுகள் மற்றும் அனுமதியை பெற்றுக் கொள்ளச் செல்லும் கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில அனுமதிகளை பெற்றுக் கொள்ள சென்றால் 5 முதல் 6 நாட்கள் வரை குறித்த அலுவலகத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே குறித்த திணைக்களத்தில் மக்களுக்கான பணி மற்றும் தேவைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

கடற்றொழிலாளர்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,குறிப்பாக வேறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் மன்னாரில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதினால் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து டக்ளஸ் தலைமையில் ஆராய்வு! (Photos) | Srilanka India Fishermen Douglasdevananda Today

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஒருங்கமைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,கடற்றொழில் உதவி பணிப்பாளர்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள கிராமிய கடற்தொழிலாளர் சங்கம் மற்றும்,மீனவ கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.     


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US