நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் படி, 2024 ஜனவரியில் நாட்டில் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த டிசம்பர் மாதத்தில் 4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம்
மேலும், உணவு பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில் 0.3 சதவீமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, உணவில்லாப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 5.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்தில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |