அனோஜனின் மரண தண்டனை இரத்து..! அவரின் சகோதரர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

Saudi Arabia Kalmunai Sivarasa Anojan
By Farook Sihan Oct 14, 2026 09:34 AM GMT
Report

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாக சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த கல்முனை - நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி ஊடாகத் தமக்கு அறிவித்துள்ளதாக அனோஜனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் பின்னரே எமக்கு முழுமையான நிம்மதி கிடைக்குமா இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனோஜனின் மரண தண்டனை இரத்து..! அவரின் சகோதரர் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Anojan S Brother Statement

குடும்பத்தினரின் நிலைப்பாடு

சவுதி அரேபிய நீதிமன்றினால் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்துக் குடும்பத்தினரின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எமது பிராந்திய செய்தியாளர் நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு விஜயம் செய்தபோதே அவரது சகோதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இன்று அனோஜனின் தாயார், தந்தையார், சகோதரர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் அனைவரும் நற்பிட்டிமுனையில் உள்ள தமது வீட்டில் கூடியிருந்தனர்.

அனோஜனின் மரண தண்டனை இரத்து..! அவரின் சகோதரர் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Anojan S Brother Statement

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அனோஜனின் சகோதரன் மேலும் தெரிவிக்கையில், எனது அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தளர்த்தப்பட்டுள்ள விடயம் குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தொலைபேசி மூலம் எம்மைத் தொடர்பு கொண்டு நேரில் தெரிவித்தார்.

வழக்கு மீண்டும் விசாரணை

இது எமக்கு ஓரளவு ஆறுதலைத் தந்த போதிலும், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அண்ணனின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் வெளிவந்த பின்னரே எமது குடும்பத்திற்கு பூரண நிம்மதி கிடைக்குமா என்பது தெரியவரும் எனத் தெரிவித்தார்.

அனோஜனின் மரண தண்டனை இரத்து..! அவரின் சகோதரர் வெளியிட்டுள்ள புதிய தகவல் | Anojan S Brother Statement

அனோஜனின் விடுதலைக்காகவும் உயிரைக் காப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இராஜதந்திரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தமது நன்றிகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US