இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட விருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
இலங்கையர்களின் வசம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை வங்கி முறைக்கு மாற்றும் முயற்சியில், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட விருந்தகங்களில் சேவைகளுக்கான கட்டணங்களை டொலர்களில் ஏற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் நிதியமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்படும் வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் வங்கியில் வைப்பிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பாக, அமெரிக்க டொலர் இலங்கையில் ஒரு வர்த்தக நாணயம் அல்ல. குறிப்பாக ஒருவரிடம் டொலர்கள் இருந்தால், அவர் ஒரு கடைக்குச் சென்று பொருள் கொள்வனவுக்காக டொலர்களில் பணம் செலுத்த முடியாது.
இருப்பினும் விருந்தங்கள், ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவரிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் இலங்கை நாட்டவரல்லாத போதும் அவரால் இந்த சேவைக் கட்டணத்தை செலுத்த முடியும்.
அதேநேரம் சேவைகளுக்காக செலுத்த வேண்டிய வெளிநாட்டு நாணயத்தின் அளவிற்கு
சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி எந்த வரம்புகளையும் நிர்ணயிக்கவில்லை
என்று தெரியவந்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
