5 நாட்களில் கொழும்பிற்குள் நுழையவுள்ள மிகப்பெரிய குழு (Video)
பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் கண்டியில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்க எதிர்ப்பு பாதயாத்திரை கடுகன்னாவ நகரை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த குழுவினர் 5 நாட்களில் கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள விடுதலைக்கான புரட்சி பாதயாத்திரை கண்டியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதயாத்திரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை வந்தடையும் என கட்சியின் பொதுச் செயலளார் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் விமானம் மற்றும் பசில் ராஜபக்சவின் உருவ பொம்மைகளை தாங்கிய வண்ணம் கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர்.













