தேர்தலில் ஐ.தே.க. இரு வழிப் பயணம்! - கட்சியின் பொதுச்செயலர் அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்குச் சில உள்ளூராட்சி சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம், அவ்வாறு இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியள்ளார்.
திறமையான புதியவர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 16 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan