அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கடுமையாகும் புதிய சட்டங்கள்
அரச குடியிருப்புகளில் இருந்து அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளை உரிய காலத்தில் வெளியேற்றுவதற்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, குறித்த வீடுகளை உரிய காலத்தில் மீட்பதற்கான சுற்றறிக்கைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்தும், நீண்டகாலமாக அரச வீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பெருமளவிலான பணத்தை இழந்து வருவதாகவும் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடுமையாகும் சட்டங்கள்
இதேவேளை, சில அரச அதிகாரிகள் தமது பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற போதும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே வீடுகளில் வாழப் பழகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீடுகளின் பராமரிப்பு மற்றும் ஏனைய பணிகளுக்கு, அரசு அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள சட்டங்களை மாற்றி கடுமையான சட்டங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




