அரச வங்கியொன்றிலிருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகள் மாயம்!
அரச வங்கியொன்றிலிருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் காணாமல்போயுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்கப் பாதுகாப்புக் கடனைப் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்ட தங்கப்கையிருப்பை சேமிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, தங்கம் அடங்கிய பெட்டகத்தில் நகைகள் காணாமல்போயுள்ளமை தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்திற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையின் போது கையிருப்பு மட்டுமன்றி தங்கப்பொருட்களையும் அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2022 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான அடகு நகைகள்
இதன்போது ஏனைய பன்னிரெண்டு வாடிக்கையாளர்களின் தங்கப்பொருட்கள் அடங்கிய பொதிகளும் காணாமல்போயுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை தங்கப் பாதுகாப்புக் கடன் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
குறித்த அரச வங்கியின் பிரதான காரியாலயத்தின் பிராந்திய முகாமையாளர், தங்க கையிருப்பு காணாமற்போனமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு விசாரணை
வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்கப்பொருட்கள் வைப்பிலிடப்பட்ட பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் பொறுப்பில் இருந்ததாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் காணாமல்போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சம்பந்தப்பட்ட வங்கிக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
