காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் (PHOTOS)
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது முகாமிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயிலுக்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 18 ஆம் திகதிக்குப் பிறகு அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam