வெனிசுலாவில் தொடரும் பதற்றம் - தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,461 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையின் தங்க விலை
இதற்கிடையில், உலக சந்தையின் தங்க விலையுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலை ரூ.3,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.337,600 ஆக அதிகரித்துள்ளது. இது ஜனவரி 1 ஆம் திகதி, 327,500 ரூபாவாக இருந்துள்ளது.
இதற்கிடையில், ஜனவரி 1 ஆம் திகதி ரூ.354,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று 365,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri