இலங்கையை உலுக்கிய கோர சம்பவம்: தந்தையின் செயலால் மற்றுமொரு மகளும் உயிரிழப்பு
புதிய இணைப்பு
அனுராதபுரத்தில் தந்தையின் விபரீத முடிவால் தீக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு மகளும் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே தந்தை, அவரின் மனைவி, 13 வயதான மகள் உயிரிழந்த நிலையில் இன்று 15 வயதான மகள் உயிரிழந்துள்ளார்.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அனர்த்தமாக மாறியிருந்தது.
கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தீ வைத்த 43 வயதான குடும்பஸ்தரும், அவரது 13 வயது மகள் மற்றும் 36 வயதான மனைவி ஆகியோர் அன்றைய தினமே உயிரிழந்திருந்தனர்.
முதல் இணைப்பு
அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ வைத்த 43 வயது நபரும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை, மகள் பலி
தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு மகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, 20 வயது மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்துள்ளார்.
அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டனர் எனவும் தெரியவந்தது.



பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri