புதிய QR முறைமையொன்றை நடைமுறைப்படுத்த அவதானம்! வெளியான அறிவிப்பு
விவசாயம் மற்றும் ஏனைய சில துறைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்கு புதிய QR முறைமையொன்றை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதற்காக வாகனங்கள் அற்ற புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய QR முறைமை
புதிய QR முறைமை தற்போது வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் எரிபொருள் தேவைகளுக்காக இது உருவாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தமது எரிபொருள் தேவை குறித்துத் தெரியப்படுத்தி இந்த புதிய QR முறைமையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும் விளக்கியுள்ளார்.
இந்த புதிய QR குறியீடு அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய உருவாக்கப்படும் என்றும், இந்த பிரிவுகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.