இலங்கையில் வங்கி கணக்குகளை பயன்படுத்துவோர் அவதானம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்களுக்கு ஒரு பொதி (Parcel) வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடியாளர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி கணக்குகளிலிருந்து பணம் திருடல்
போலி இணையதள இணைப்பை (Link) கிளிக் செய்யுமாறும், இணைப்பை கிளிக் செய்ததும், வங்கி அட்டைகளின் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது.
இவ்வாறு விபரங்களை வழங்கியதும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கித் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதோடு, இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே சந்தேகத்திற்கிடமான எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தெரியாத நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ உங்களது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இலங்கைத் தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.