மக்களே அவதானம்! மோசடிக்காரர்களிடம் சிக்கும் உங்கள் வங்கித் தகவல்கள் - பொலிஸாரின் அவசர எச்சரிக்கை
இணையம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடிகள் அதிகரித்து வருவதன் காரணமாக, இவ்வாறு இணையவழியில் பொருட்களை வாங்கும்போதும் அல்லது கொரியர் சேவைகளைப் பயன்படுத்தும் போதும் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
அவசர எச்சரிக்கை
நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை சரிபார்க்குமாறும் பொலிஸார் நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது.

சந்தேகத்திற்கிடமான அல்லது அறிமுகமில்லாத இணைப்புகளை, குறிப்பாக குறுஞ்செய்தி (SMS) அல்லது செய்திப் பரிமாற்றத் தளங்கள் வழியாக விபரங்களைப் புதுப்பிக்கக் கோரும் செய்திகளை, கிளிக் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சட்டப்பூர்வமான தளங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையத்தளங்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தனிநபர் மற்றும் வங்கித் தகவல்களைத் திருடி வருவதாகவும் பொலிஸார் மேலும் எச்சரித்துள்ளனர்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan