ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய கடைசி வாய்ப்பு: 10 நாட்கள் ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்குப் பதிலாக, ஈரானும் எதிர்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதுடன், அந்தப் பாதையை கடக்க முயன்ற சில கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மீதான் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை நிராகரித்த ஈரான், தங்களது மின் நிலையங்களை தாக்கினால் வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலைங்களை தாக்குவோம் என்று பதில் அறிவிப்பை வெளியிட்டது.
10 நாட்களுக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே ட்ரம்ப் விதித்த கெடு கடந்த 24ஆம் திகதி காலை முடிவடைய இருந்த நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதால் அதன் மின்நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டத்தையும் நிராகரித்த நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த நிலையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam