எரிபொருள் விலை குறைப்புக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள்
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் அழுத்தம் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படுவதில் தடையேற்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரமுகர் ஆனந்த பாலித குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன ஒருங்கிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
எரிபொருள் வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்கள்
இந்த நாட்டில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டாம் என அரசிடம் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் வாக்குறுதியளித்த சலுகைகளையோ அல்லது நிவாரணங்களையோ இன்னும் வழங்காததாலேயே இந்த நிறுவனங்கள் அவ்வாறு வலியுறுத்தியுள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆனந்த பாலித, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் விலைகள் குறைக்கப்படும் என்று கூறியபோதிலும், தற்போது கையிருப்பில் இருப்பது அதிக விலைக்கு வாங்கப்பட்ட பழைய கையிருப்புகளே என்பதால் விலையைக் குறைக்க முடியாது என்றும், அவ்வாறு குறைப்பதற்கு இது ஒரு எரிபொருள் விற்பனைக் கடை அல்ல என்றும், பிரதமர் கூறுவதாக ஆனந்த பாலித குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் விற்பனை
பிரதமரின் இந்த கூற்றை வன்மையாக விமர்சிக்கும் அவர், கடந்த மார்ச் மாதம் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்தியபோது அரசாங்கம் ஒரு எரிபொருள் விற்பனைக் கடையைப் போல செயல்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார்.
மேலும், தற்போதைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து, பெட்ரோல் விலையை லீட்டருக்கு ஐந்து ரூபா வரையிலும், டீசல் விலையை லீட்டருக்கு ஆறு ரூபா வரையிலும் குறைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri