கட்டாரின் முக்கிய எரிவாயு முனையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து : 13 தொழிலாளர்கள் பலி
கட்டாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில், பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் நேற்று(21.06.2026) மாலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தாக்குதல்களால் ஆலை சேதமடைந்து மூடப்பட்டிருந்த நிலையில், அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து நேற்று ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், தொழில்நுட்ப கோளாறினால் திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான்
காலை 18 பேர் மாயமானதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 13 பேர் உயிரிழந்துள்ளதை கட்டாரின் எரிசக்தி அமைச்சரும், கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான சாத் அல்-காபி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பேசிய சாத் அல்-காபி, இது ஒரு விபத்து, சதியோ, பகையால் செய்த வேலை அல்ல. அவசரப் பராமரிப்புத் தேவைகள் காரணமாக, கடந்த 2025 டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam