எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பத்தினை ஏற்படுத்துவோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால் அதனை காணொளியில் பதிவு செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இந்த காட்சிகள் பயன்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 675 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனைகள்
இதன்படி, அண்மைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனைகளின் எண்ணிக்கை 670 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சோதனையில் 21,636 லீட்டர் பெட்ரோல், 33,462 லீட்டர் டீசல், 11,100 லீட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்தச் சோதனைகள் தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
