இலங்கைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அந்நியச் செலாவணி சுமை ஏற்படாத வகையில், எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு தமது தாய் நிறுவனங்களிடம் இருந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு எரிபொருளை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமார் 200 நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கி எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்குமாறு இந்தியன் எண்ணை நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.