எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை! பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேவையாக எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.

மீண்டும் தொடரும் எரிபொருள் வரிசை
எரிபொருள் விலைச்சூத்திரன்படி கடந்த 5 ஆம் திகதி எரிபொருளின் விலைகள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் அவற்றை கொள்வனவு செய்து விநியோகிப்பதில் தயக்கம் காட்டியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam