எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி அம்பலம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு டீசல்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர் மோசடி சம்பவமொன்று இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
வரிசைகளில் காத்திருந்து வாகனங்கள் எரிபொருளை நிரப்ப முன்னோக்கி செல்லும் போது வாகன உரிமையாளர்கள்,ஊழியர்கள் வாகனங்களில் காணப்படும் எரிபொருளை கொள்கலன்களில் சேமித்து பதுக்கி வைக்கின்றமை தெரியவந்துள்ளது.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு வெளியேறி மீண்டும் கொள்கலன்களில் சேமித்து மீண்டும் வரிசைகளில் காத்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
நாட்டில் கடுமையாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,இவ்வாறு ஒரு சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமித்து வைக்கின்றமை மேலும் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
