தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் துறையினரை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறும் தனியார் நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
இதேவேளை,எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் கல்வித்துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஜுன் 20ஆம் திகதி முதல் இரண்டு வார காலத்திற்கு வீட்டில் இருந்து ஒன்லைன் மூலம் அவர்கள் பணியாற்றக்கூடிய வகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசேட சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam