எரிபொருள் நிலையத்தில் குழப்பம்! பொதுமகனை கடுமையாக தாக்கும் பொலிஸார்
குருநாகல் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதியொருவரை பொலிஸார் கடுமையாக தாக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில், எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வரிசையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் சாரதியொருவர் ஊழியர்கள் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகம் வெளியிட்டு நிலத்தடி கிடங்கைக் காட்டுமாறு முரண்பட்டுள்ளதுடன்,குறித்த நபருக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கடுமையாக தாக்கியுள்ளதுடன், துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ள காணொளியொன்று சமூகவளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.