எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை அரச ஊழியர்களின் வேலை மற்றும் கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய திட்டம்!
எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி முதல் இரண்டு வார காலம் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேசமயம், பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு வார கால இணையவழி கற்றல் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சுற்றுநிரூபம்
கல்வி அமைச்சும், அரச நிர்வாக அமைச்சும் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
வங்கிகள் ,மருத்துவம், எரிபொருள் விநியோகம், உணவுப்பொருள் விநியோகம் உட்பட்ட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam