எரிபொருள் விநியோகத்தை தாமதப்படுத்திய காகம்
பண்டாரகம பிரதேசத்தில் காகம் ஒன்றினால் எரிபொருள் விநியோகம் அரை மணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
பண்டாரகம கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு ஐந்து நாட்களின் பின்னர் திங்கள்கிழமை எரிபொருள் வந்தடைந்துள்ளது.
திடீர் மின்தடை
அப்பிரதேசத்தில் இருக்கும் ஒரே எரிபொருள் நிலையம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.
அதனையடுத்து நீண்ட வரிசைகளில் காத்திருந்த பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகளை ஆரம்பிக்க முற்படும் போது பாரிய வெடிப்புச் சப்தத்துடன் பண்டாரகம பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியுள்ளது.
இதன்போது நீண்ட நேரத்தின் பின்னர் மின்மாற்றி ஒன்றில் காகம் ஒன்று மோதி மின்தடை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மின்சார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் வந்து மின்சாரத் தடையை மீண்டும் சரிசெய்யும் வரை அரை மணி நேரத்துக்கும் மேலாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
