எரிபொருள் நெருக்கடி! 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை இழக்கும் அதிவேக நெடுஞ்சாலை
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை பெற்று வந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள் (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) இயக்குனர் நிஹால் லோடிவிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு முன்பிருந்த வருமானம் கிட்டத்தட்ட பாதியாக குறைத்துள்ளது .
வாகன போக்குவரத்து பாதிப்பு
எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் போக்குவரத்து நாளொன்றுக்கு 102,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது 55,000 முதல் 60,000 வாகனங்கள் மட்டுமே இயங்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இவை 53 சதவீதமாகும்.

எரிபொருள் நெருக்கடிக்கு முன்னர், அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினூடாக சராசரி நாளாந்த வருமானம் சுமார் 28 மில்லியன் ரூபாவாகும் எனவும்,தற்போது அந்த வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan