பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை வீழ்ச்சி
பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலை குறைவடைந்துள்ளது.
போதுமான அளவு மீன் கிடைக்கப்பெறுவதாக பேலியகொடை மத்திய மீன் சந்தை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
தற்சமயம் மீண்டும் பெருமளவிலான நுகர்வோர் பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு எடுத்து வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் தலபத் மீன் கிலோவொன்று மூவாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் கடந்த மாதத்திற்கு முன்னர் 600 முதல் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சாலை மீன் கிலோவொன்று தற்சமயம் 350 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
லின்னா மற்றும் பல மீன் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக
பேலியகொடை மத்திய மீன் சந்தை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த
குரே தெரிவித்துள்ளார்.