கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்: தர்ஷனியின் தாய் வெளியிட்ட தகவல்
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட மகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவந்து இங்கே வைத்து கஷ்டப்படுவது என்னால் முடியாது என தர்ஷனி பண்டாரநாயக்கவின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் தாய் - தர்ஷனி பண்டாரநாயக்க 35 வயது, இனுக விக்கிரமசிங்க - 07 வயது, அஸ்வினி விக்கிரமசிங்க - 04 வயது ,றின்யானா விக்கிரமசிங்க - 02 வயது, கெலீ விக்கிரமசிங்க - 02 மாதங்கள் காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இலங்கையர் கைது
சம்பவம் நடந்த வீட்டிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இலங்கையர்கள் குருணாகல் - பொல்கஹவெல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே கனடாவுக்கு சென்றுள்ளதாக உயிரிழந்த தர்ஷனியின் தாய் தெரிவித்துள்ளார்.

"குழந்தைகளின் ஐந்து பெட்டிகளை கொண்டு வந்து இங்கே வைப்பது எனக்கு கடினமாக உள்ளது. அப்பாவும் தம்பியும் கனடாவின் போகின்றார்கள்..."
மகளை இழந்த வலியும், பேரக்குழந்தையை இழந்த வேதனையும் காலம் எவ்வளவு பறந்தாலும் வலி நிரந்தரமாக இருக்கும் என்றும் தர்ஷனி பண்டாரநாயக்கவின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri