மூழ்கும் நிலையிலிருந்த இலங்கையை தக்க நேரத்தில் மீட்டெடுத்த இந்தியா! (Photos)
2022 ஜனவரி மாதத்திலேயே இலங்கை வங்குரோத்து நிலையை அடையவிருந்தது. எனினும் இந்தியா வழங்கிய 500 மில்லியன் மற்றும் உறுதியளித்த 1400 மில்லியன் டொலர்கள் காரணமாக அந்த நிலைமை தவிர்க்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
43 வது படையணியின் மாநாடு, நேற்று கொழும்பில் இடம்பெற்றபோது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இந்த நிலை தொடரக்கூடாது, நாடு வங்குரோத்து நிலையை அடையும் போது, இந்தியாவிடம் செல்லவும், சீனாவிடம் செல்லவும், பங்களாதேஸிடம் செல்லவும் தேவையில்லை.
இதனை தாண்டி மாற்று கொள்கைகள் தயாரிக்கப்படவேண்டும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.
இதற்கான முன்னெடுப்புகள் நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து, பொதுமக்கள் நேரடி பங்களிப்புடன் செயற்படுத்தப்படவேண்டும் என்று பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையை வென்றெடுக்க, அசாதாரண தைரியத்துடன், அசாதாரண தீர்வு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.



சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan