தொண்டமானாறு மதிப்பீட்டுப் பரீட்சை நேர அட்டவணையில் மாற்றம்!
நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை அடுத்து தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தவணை மதிப்பீட்டுப் பரீட்சை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் கல்வி பயிலும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான தவணை மதிப்பீட்டுப் பரீட்சைகள் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதனால் அன்றைய தினம் பரீட்சைகளைப் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15 ஆம் திகதி
புதன்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும்
வகையிலும், அதனைத் தொடர்ந்து ஏனைய பரீட்சைகளைத் தொடர்ச்சியாக நடாத்துவதற்கு
முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ள தொண்டமனாறு தேசிய வெளிக்கள
நிலையத்தினர் புதிய பரீட்சை நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
