முட்டை விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 55 ரூபாய்க்கும் குறைவான விலையில் முட்டை வழங்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் முடிவடைந்தவுடன் முட்டை நெருக்கடி நீங்கும். இடைத்தரகர்களே இந்த முட்டைகளின் விலையை உயர்த்தியுள்ளனர்.
அடுத்த வாரத்திற்குள் 20 முட்டை பாரவூர்திகளை கொழும்புக்கு வரவழைத்து நுகர்வோருக்கு 55 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்வோம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.