2027 முதல் பாடசாலை கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டுதல் குழுவின் நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய அமைச்சர்கள், துறைசார் வல்லுநர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த தேசிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட உள்ளது.
கல்வி முறைமையில் மாற்றம்
2019-ல் தொடங்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தச்செயல்முறை, தற்போதைய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க, 2026ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆறாம் வகுப்பிற்கான கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதன்படி, கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான தொடர்ச்சியான செயல்முறையை செயல்படுத்துவதற்கும், அச்செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கும், துறைசார் வல்லுநர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam