பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாடசாலை மாணவிகளின் தொடர் கல்வியை உறுதி செய்யும் நோக்கில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் தரம் 6 இற்கு மேல் கல்வி பயிலும் சுமார் 1.05 மில்லியன் (10 இலட்சத்து 50 ஆயிரம்) மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர்.
முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் எனவும் தலா 720/- ரூபா பெறுமதியான இரண்டு வவுச்சர்கள் ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தலா 120/- ரூபா பெறுமதியான 08 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 12 பக்கெட்டுகள், அல்லது, தலா 180/- ரூபா பெறுமதியான 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட 08 பொதிகளை பெறும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரார் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்! இலங்கைக்கு காத்திருக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் 4வது நடுவராக இணைந்துள்ள பிரபல நடிகை... செம கலக்கல் புரொமோ, யாரு பாருங்க Cineulagam