சர்வதேச நாடுகளின் கடுமையான முடிவுகள்! இலங்கையின் நிலமை பாரதூரமாகும் (VIDEO)
ஐரோப்பிய நாடுகளால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மனித உரிமை உட்பட பல விடயங்களை கண்காணித்து பல நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகை என்பதே தவிர இலங்கைக்கு உரித்துடையது அல்ல எனவும்,வலுக்கட்டாயமாக கேட்க இயலாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை கலாநிதி கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதற்கு பல நிபந்தனைகள் உள்ளதுடன்,புலம்பெயர் தமிழர்கள் அவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை உட்பட பல விடயங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் எடுத்துச்செல்லும் போது அவை சர்வதேச நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க வாய்ப்பாக அமையும்.
இலங்கை பொருளாதாரத்தினை பொருத்தமட்டில் வெளிநாட்டுத்துறை முழுமையாக செயலிழந்துள்ளதுடன், உள்நாட்டுத்துறை மாத்திரமே செயற்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினையை தீர்க்க உறுதியான அரசாங்கம் வேண்டும் என்பதுடன்,இலங்கை மிக பாரதூரமான நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,