இலங்கையில் வறுமையில் வாடும் மூன்று மில்லியன் ஏழைகள்! பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன்
இலங்கையில் மூன்று மில்லியன் அளவான மக்கள் பரம ஏழைகளாக இருப்பதாக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டிப் பிரதேசத்தில் நடைபெற்ற ஏழைக்குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குப் பொதிகள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பசியில் வாடும் மில்லியன் ஏழை
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சர்வதேச புள்ளிவிபரங்களின் பிரகாரம் ஒரு மில்லியன் ஏழை மக்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கடந்த மூன்று மாத காலத்துக்குள்ளாக அதன் எண்ணிக்கை மூன்று மில்லியன் வரை உயர்ந்துள்ளது. பொருளாதார நிலை அந்தளவுக்கு சீர்குலைந்துள்ளது.
பணவீக்கம் நூறு வீதம் உயர்வடைந்துள்ளது. அத்துடன் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரம ஏழைகளாக மாறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.