கோட்டாபயவிற்கும் பயமில்லை: அவரின் தந்தைக்கும் பயமில்லை - கடும் ஆத்திரத்தில் மக்கள்
ஆறு நாட்களாக மண்ணெண்ணெய் எடுப்பதற்கு பாடுபடுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாம் மண்ணெண்ணெய்க்காகவும், எரிபொருளுக்காகவும் வீதியில் இருக்கும் போது மக்களின் கல்வி நடவடிக்கை வீணாவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாங்கள் கோட்டாபயவிற்கும் பயமில்லை, அவரின் தந்தைக்கும் பயமில்லை, நான்கு வயது குழந்தையும் கூட அவர் வீதிக்கு வந்தால் அடிக்கும் என கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள் இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குடும்பஸ்தரொருவர் கருத்துரைக்கையில், ஆயிரம் ரூபாவிற்கு ஒரு நாள் சாப்பிட்ட மக்களுக்கு தற்போது இரண்டாயிரம் ரூபா தேவையாக இருக்கிறது.
ஆயிரம் ரூபா தான் ஒரு நாள் சம்பளமாக இருந்தால் இன்னொரு ஆயிரம் ரூபாவை கடன் வாங்க வேண்டியதாக உள்ளது.
இலங்கை பிரஜை என்ற பெயர் மட்டும் தான். சொந்த இடம் கூட இல்லாமல் வாடகை கட்ட முடியாமல் பெரும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுப்பதா? வீட்டு கூலி கட்டுவதா? என கண்களில் கண்ணீர் ததும்ப குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
