கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் பணவீக்க விகிதம் குறைவு
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.
2022 செப்டெம்பரில் 69.8வீதமாக ஆக இருந்த இந்த பணவீக்கம் 2022 அக்டோபரில் 66 ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, உணவுப்பணவீக்கம் செப்டெம்பரில் 94.9 சதவீதத்திலிருந்து அக்டோபரில் 85.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இந்த வருடம் முதன்முறையாக பணவீக்கத்தில் ஏற்பட்ட குறைவாக கருதப்படுகின்றது.
பணவீக்கம் உச்சத்தை எட்டும்
இந்த மாதம் பணவீக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்த்த இலங்கையின் நாணய அதிகார சபைக்கு இந்த எண்ணிக்கை வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.
இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு கடன் பெறுவதற்கான செலவுகளை 15.5வீதமாக நிலையாக வைத்துள்ள நிலையிலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த நிதிக்கொள்கை மறு ஆய்வு நவம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
உலகளாவிய பொருட்களின் விலை வீழ்ச்சி, நட்பு நாடுகளின் உதவி மற்றும் பலதரப்பு
கடன் வழங்குனர்களின் நிதி ஆகியவை குறுகிய காலத்தில் இலங்கை தனது நிதியை
ஸ்திரப்படுத்த உதவியுள்ளன.