வடக்கு - கிழக்கில் தரையிறங்க தயாராகும் இந்தியாவின் புதிய வியூகம் (VIDEO)
வடக்கு - கிழக்கில் இந்தியா பொருளாதாரத்தினை மையமாக பயன்படுத்தி காலூண்ட ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்தோ - பசுபிக் சமுத்திரத்தில் இன்று ஏற்பட்டுள்ள கேந்திர முக்கியத்துவம் தமிழர் பகுதிகளுக்கும்,இந்தியாவிற்கும் சமமாக உள்ளது.இவற்றில் தமிழர் பகுதிக்கான பெறுமதி சிறியளவில் காணப்படுகின்றமையினால், இந்தியாவிற்கான பெறுமதியும்,கேந்திர தன்மையும் அதிகரித்துள்ளது.
இந்த பெறுமதியை இந்தியா எவ்வாறு கையாளுகின்றது என்பது தான் பிரச்சினை. இவை இந்தியாவில் உயரும் பட்சத்தில் இந்தியா வடக்கு கிழக்கில் காலூண்ட ஆரம்பிக்கும் என்பதே உண்மை.
அந்த வகையில், ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தின் மூலம் பொருளாதார கட்டுமானங்களில் இந்தியா நுழையும் போது இலங்கையின் பெறுமதி குறையும்.இவை தமிழர் பகுதிகளுக்கு ஆபத்தாகவே அமையும்.
இது தொடர்பில் இந்தியாவுடன் பேச இலங்கையில், தகுந்த தமிழ் தலைவர்கள் இல்லை. அவ்வாறான ஒருவரை இந்தியா இதுவரை அடையாளம் காணவும் இல்லை. இதனை கருத்திற்கொண்டு இந்தியா பொருளாதாரத்தின் மூலம் வடக்கு - கிழக்கில் காலூண்ட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri