மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
மேலும், மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தின் பெரிய நீலாவணை முதல் பொத்துவில் பகுதி வரையுள்ள பகுதிகளில் இவ்வாறு மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
கடும் வரட்சியுடனான காலநிலை
கடும் வரட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஆற்று மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிா்துள்ளனர்.

இதற்கமைய, இறால் ஒரு கிலோ 1600 ரூபாவாகவும், கணவாய் ஒரு கிலோ 1800 ரூபாவாகவும், செப்பலி (கோல்டன்) ஒரு கிலோ 900 ரூபாவாகவும், மீசை பனையான் ஒரு கிலோ 600 ரூபாவாகவும், மணலை மீன் 1400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், ஏனைய சில்லறை மீன் வகைகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது.
மீன்களின் வகைகளுக்கு தட்டுப்பாடு
கல்முனை மாநகரை அண்டிய மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனை ,சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் ஏனைய நிந்தவூர் மாளிகைக்காடு மீன் சந்தைகளிலும் கொண்டு வரப்படுகின்ற மீன்களின் வகைகள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஆற்றை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்பகுதியில் கருவாடுகளுக்கு கடும் கிராக்கி நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri