இலங்கை மக்களின் வருமானத்தில் கடும் வீழ்ச்சி: வெளியான கணக்கெடுப்பு
இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதை அறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வேலை இழப்புகள் மற்றும் வேலை ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை,வேலை நேரம் குறைக்கப்பட்டமை,விற்பனை வீத வீழ்ச்சி என்பன இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கால்நடை தீவனம், எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிப்பு என்பனவும் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |