கொழும்பின் சிக்கலான அரசியல் களம்: சஜித் தலைமையில் கூடும் ஐக்கிய மக்கள் சக்தி!
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது
பிற்பகல் 2.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லச்;மன் கிரியெல்ல, பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக 41 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தமக்கு அதிக நம்பிக்கை உள்ளது.
போராட்டம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்; அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டியில் இருந்து பாரிய பேரணியை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri