வரும் மாதங்களில் இலங்கைக்கு உதவப் போகும் தெய்வங்கள்!
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குவது தொடர்பில் சீனாவும் இந்தியாவும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன
இந்தநிலையில் குறித்த உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தியாவிடம் இருந்து உணவு மற்றும் அவசர தேவைகளுக்காக ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை இந்தியாவுடன் ஐந்து முதலீட்டு உடன்படிக்கைகளுக்கு இணங்கியது.
இந்தநிலையில் இந்திய உதவிகள் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எனினும் அதற்கு பின்னரும் 2 பில்லியன் டொலர்களை இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளது. அதற்கு இந்தியா, கொள்கையளவில் இணக்கமும் வெளியிட்டுள்ளது.
எனினும் நிபந்தனைகள் குறித்து தகவல்கள் எவையும் இல்லை.
அதேநேரம் சீனாவிடம் 2.5பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது. சீனாவும் அதற்கு உடன்பட்டுள்ளது,
எனினும் கொழும்பு கோட்டையில் உள்ள சொத்துக்களை அது எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் அது தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இந்த தேசிய சொத்துக்களை கோருவது தொடர்பான தகவல் தொடர்பில் சீனாவும் கருத்துக் கூறவில்லை
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கட்ட உதவி இலங்கைக்கு கிடைப்பதற்கு இன்னும் 9 மாதங்கள் வரை செல்லும் என்ற தகவலின் அடிப்படையில், இலங்கைக்கு இந்தியாவும் சீனாவுமே கைக்கொடுக்கும் தெய்வங்கள் என்பது யதார்த்தமானது.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
