கோட்டா- மஹிந்த சந்திப்பு: 113 க்காகவே புதியவர்களுக்கு அமைச்சுக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையைப் பெறுவதற்காக ஜனாதிபதி தரப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து சாந்த பண்டாரவை ஜனாதிபதி தரப்பு தம்பக்கம் இழுத்துக்கொண்டது.
இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால், அரசாங்க எதிர்ப்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் மனைவியின் சொந்தக்காரரே இந்த சாந்த பண்டார என்ற விடயமாகும்.
சாந்த பண்டாரவை தம் பக்கம் கொண்டு வந்ததன் மூலம், அரசாங்கத்தில் இருந்து கொண்டு சுயாதீனமாக செயற்படுவதாக கூறும் 42 பேரின் இடைக்கால நிர்வாக யோசனை ஜனாதிபதி தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளமுடியும்.
அதற்கு பதிலாக பொதுஜன பெரமுன அரசாங்கமே தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதில் ஜனாதிபதியும் அவர் தரப்பினரும் உறுதியாக இருப்பதை அவதானிக்கமுடிகிறது
புதிதாக சத்தியபிரமாணம் செய்து கொள்ளும் அமைச்சரவையின் உறுப்பினர்கள், நாளை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் தமது தொகுதிகளில் அரசாங்கத்துக்கு ஆதரவான பேரணிகளை நடத்தி தமது விசுவாசத்தை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 என்ற தனிப்பெரும்பான்மைக்காக ஜனாதிபதி தரப்பு மேற்கொள்ளும் முயற்சியே புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்கும் உத்தியாக உள்ளது.
இந்தநிலையில் புதுவருடத்துக்காக தங்காலைக்கு சென்றிருந்த பிரதமர் மஹிந்த நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அமைச்சர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
