இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதாரம் மீளுமா..! எழும் பில்லியன் டொலர் கேள்விகள்
இலங்கையில் புதிய எதிர்ப்பு அலைகள் மற்றும் சமூக அமைதியின்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் இது ஒரு தற்காலிக அமைதியா அல்லது நீடித்த சமூக அமைதியா என்பது தெளிவாக இல்லை என ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய அரசாங்கம் சமூக அமைதியின்மையைக் கட்டுப்படுத்துமா? வெளிநாட்டு உதவிகளைப் பெற்று, மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசியப் பற்றாக்குறைகளைத் தீர்த்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமா?
கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கடந்து பொருளாதார மீட்சியை ஏற்படுத்துமா? என்று பில்லியன் டொலர் கேள்விகள் எழுந்துள்ளன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவறான பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் முதல் சில நாட்கள் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உகந்ததாக இல்லை.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அவர்கள் மீது படைகளால் கடுமையான மற்றும் மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டமையானது பரந்த அளவிலான இலங்கையர்களையும் சர்வதேச சமூகத்தையும் கோபப்படுத்தியுள்ளது.
இந்த அரசாங்க வன்முறைக்கு மக்கள் அளிக்கும் பிரதிபலிப்பு, சமூக அமைதியின்மை தொடருமா என்பதை தீர்மானிக்க முடியும். அத்துடன் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பு சர்வதேச உதவி கிடைக்குமா என்பதை தீர்மானிக்க முடியும்.
எனவே அரசியலைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களின் குறிப்பாக எரிவாயு, டீசல், பெட்ரோல் மற்றும் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடுகளை விரைவாகக் குறைத்து சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது புதிய அரசாங்கத்தின் கடமையாகும்.
அத்துடன் நிதி நெருக்கடியின் ஆழம் என்னவென்றால் நாட்டை அதன் கடுமையான கஷ்டங்கள் மற்றும் பற்றாக்குறைகளில் இருந்து மீட்பதற்கு உடனடி அவசர நிதி தேவைப்படுகிறது. நாட்டின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் உடனடி வெளிநாட்டு உதவியை பெரிதும் சார்ந்துள்ளது.
கடன் வசதிகள்
பின்னர் சர்வதேச நாணய நிதிய கடன் வசதி அல்லது விரிவாக்கப்பட்ட நிதி வசதி இன்றியமையாதது.
ஏற்கனவே சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கிய இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஜூலை 22ம் திகதி காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தமையும் சர்வதேச உதவிக்கான தீர்மானத்தை சீர்குலைத்துவிட்டதா என்பதே இப்போதைய பொருத்தமான கேள்வியாகும்.
நிதி உதவிகள்
ஜூலை 22 அதிகாலையில் காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களை ஒடுக்கியது, தேவைப்படும் சர்வதேச உதவியை குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் பிரிட்ஜிங் நிதி வசதிகளில் தாமதத்தை ஏற்படுத்துமா என்ற பில்லியன் டொலர் கேள்விகள் எழுந்துள்ளன.
நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கு அமைதியின்மையும் அரசியல் உறுதியற்ற தன்மையும் குறையும் என்று
நம்புவதாக விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
